எலி மருந்தில் பல்துலக்கிய சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

250

இந்தியா…

இந்தியாவில் 18 வயது சிறுமி ஒருவர் டூத் பேஸ்ட்க்கு பதிலாக எலி மருந்தில் பல் துலக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் தாராவியைச் சேர்ந்த 18 வயது சிறுமியான அப்சனா கான். இவர் கடந்த 3 ஆம் திகதி காலையில் வழக்கம் போல் பல் துலக்க சென்றுள்ளார்.

அப்போது தவறுதலாக அருகில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்தை எடுத்து பல் துலக்கியுள்ளார்.

இதையடுத்து, சுவை வேறுபாட்டை உணர்ந்த சிறுமி தனது வாயிலிருந்த எலி மருந்தை உடனடியாக கீழே துப்பிவிட்டு வாயை சுத்தம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி வீட்டில் யாரிடமும் கூறவில்லை.

பின்னர் சிறுது நேரத்தில் சிறுமிக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.