ஒரு காலால் குதித்து குதித்து பள்ளிக்கு செல்லும் சிறுமி… பலரின் இதயத்தை கனமாக்கிய வீடியோ!!

491

டெல்லி…

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி பேசு பொருளாக மாறும். அப்படி இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை நெகிழவைத்துள்ளது.

அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் முதுகில் பள்ளி பையை மாட்டிக் கொண்டு, ஒரு காலில் குதித்துக் குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ள சிறுமி பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த சீமா என்ற மாணவியாவர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்துள்ளார்.

இருப்பினும் இந்த சம்பவம் இவரை வீட்டோடு முடக்கிடவில்லை. கல்வி மீது கொண்ட ஆர்வத்தாலும், தன்நம்பிக்கையாலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ஒரு காலில் குதித்துக் குதித்து தினமும் சென்று வருகிறார். இவரின் இந்த கல்வி ஆர்வத்தைப் பார்த்து ஆசிரியர்கள் மாணவி சீமாவிற்கு உதவியாக இருந்து வருகின்றனர்.

இதையடுத்து மாணவி சீமாவிற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதற்கொண்டு நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். மேலும் மாணவிக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.