ஒரே ஆண்டில் 20 பேரை பாலியல் வன்கொடுமை செய்த மாடலிங் இளைஞர் : திடுக்கிடும் தகவல்!!

270

சென்னை…

சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சயித் (27). இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார் . மேலும் இவர் மாடலிங் மற்றும் event managementம் செய்து வருகிறார்.

இவர் கடந்த 3 வருடங்களாக ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழகி காதலித்து வந்துள்ளார். அதே நேரத்தில் முகமது சயித் தனது இன்ஸ்டாகிராமில் தான் பதிவிடும் மாடல் புகைப்படங்களைப் பார்த்து தன்னிடம் பேசும் பெண்களிடமும் ஆசை வார்த்தைகள் கூறி காதல்வலை வீசியுள்ளார்.

அவர்களை இரவு நேர விடுதிகளுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். சில நேரங்களில் தனது வீட்டுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்து விட்டு காலையில் பெற்றோர் எழுவதற்கு முன் முன் பெண்களை அழைத்துக்கொண்டு வெளியே விடுவார்.

மேலும், அந்தப் பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் வாங்கி சொகுசு வாழ்க்கைக்காக செலவும் செய்துள்ளார். ஒரு இளம் பெண்ணிடம் பணத்தை வாங்கி, மற்றொரு பெண்ணுக்கு செலவு செய்து பெரிய ஆளாக கட்டிக்கொண்டுள்ளார். பின்னர் பிசினஸில் கொஞ்சம் பணம் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தனது காதலியான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் ஈ.சி.ஆர் பகுதிக்கு முகமது சயித் சென்றபோது எதேரச்சையாக அவரது செல்போனை வாங்கிப் பார்த்த போது, முகமது சயித் பல பெண்களுக்கு காதல் வலைவீசி குறுஞ்செய்தி அனுப்பியிருப்பதைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதுபற்றி அவரிடம் எதுவும் கேட்காமல் சம்மந்தப்பட்ட 2 பெண்களின் இன்ஸ்டாகிராம் ஐ.டி-க்களை மட்டும் குறித்து வைத்து, அவர்களிடம் தனித்தனியாக பேசியபோது தனது முகமது சயிதின் பல பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்று இளம் பெண்களும் முகமது சயித் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் முகமது சயித்தை வேப்பேரி அனைத்து மகளிர் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் கடந்த ஓராண்டில் இன்ஸ்டாகிராம் மூலம் இதேபோல 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி வந்ததாக முகமது சயித் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளார் என்பது குறித்தும் வேறு யாராவதுஇதில் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்தும போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.