ஓடும் ரயிலில் பிரசவித்த குழந்தையை வீசிய தாய் : மனதை உலுக்கிய சம்பவம்!!

288

சேலம்….

சேலம் மாவட்டம் ஓமலூர் பெரமச்சூரில் உள்ள ரயில்வே கேட் பதில் நேற்று காலை பிறந்த சில மணி நேரமே ஆண் பச்சிளம் குழந்தை ஒன்று அழுந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிசுவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து குழந்தையை வீசியது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில் மும்பையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இரண்டு பெண்கள் இறங்கி சென்றதாகவும் அவர்கள் குழந்தையை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதனையடுத்து அந்த பெண்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொப்புள்கொடி வெட்டப்படாத நிலையில் ஒரு பெண் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பதும்,

அந்தப் பெண் குழந்தையை பிரசவித்துவிட்டு தனியாக வந்து வயிறு வலிக்கிறது என கூறி சிகிச்சைக்கு சேர்ந்ததும் தெரியவந்ததது. சம்பவ இடத்திற்கு விரைந்த அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்

விசாரனையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சந்திரபட்டியை சேர்ந்த 22 வயது பெண் என்பது தெரிய வந்தது முதலில் அவர் தான் குழந்தை பிரசவிக்க வில்லை என்றும் எங்கும் குழந்தையை வீசவில்லை என்றும் சமாளித்தார்.

பின்னர் மருத்துவர்கள் வந்து, குழந்தை பிறந்துள்ளது எதையும் மறைக்க கூடாது என அறிவுறுத்தினர். இதனையடுத்து தானும் தனது அக்காவும் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து கோவில்பட்டி செல்ல தாதர் எக்ஸ்பிரஸில் வந்ததாகவும்,

திருமணமாகாத நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் ஊருக்குச் சென்று குழந்தையை பெற்றுவிட்டு மீண்டும் பூனே செல்லலாம் என முடிவு செய்திருந்ததாக கூறினார். ஆனால் ஓமலூர் பகுதியில் ரயில் வந்தபோது தனக்கு ரயிலில் வைத்தே குழந்தை பிறந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணத்திற்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்தால் அதனை மறைக்க முடிவு செய்து தண்டவாளத்தில் போட்டுவிட்டு, இந்த தனியார் மருத்துவமனையில் வந்து வயிற்றுவலி எனக் கூறி சிகிச்சை பெற முயற்சித்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் பெண்ணுக்கு அறிவுரை கூறி பெற்றெடுத்த ஆண் குழந்தையை கொண்டு வந்து ஒப்படைத்தனர். குழந்தையை அப்பெண்ணும் ஏற்றுக்கொண்டார்.

மேலும் பெண்ணின் பெற்றோருக்கு காவல் துறை தகவல் தெரிவித்தனர். இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது என்றும் கர்ப்பத்திற்க்கு காரணமான நபரை திருமணம் செய்யுங்கள் இல்லையென்றால் முறையாக அவர் மீது புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறிவிட்டு போலீசார் திரும்பி சென்றனர்.