கஞ்சாவுக்கு அடிமையான மகன் : தாய் எடுத்த துணிச்சல் முடிவு!!

379

தெலுங்கானா….

சமூக வலைத்தளத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து கண்களில் மிளகாய் பொடியை தூவி வேதனைப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தெலுங்கானாவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமனம்மா. இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவர்களது 15 வயதான மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். கொரோனா ஊரடங்கிக்கு முன்பு வரை நல்ல பையனாக பள்ளிக்கு சென்று வந்த சிறுவன் ஆன்லைன் வகுப்பு முறை வந்ததை அடுத்து படிப்பில் ஆர்வம் செலுத்தவில்லை. ஓராண்டுக்கு மேலாக வீட்டிலேயே இருந்ததால் பலபேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அது கஞ்சா போதை வரைக்கும் இழுத்து சென்றுள்ளது. வீட்டில் இருந்து வெளியேறும் சிறுவன் அடிக்கடி கஞ்சாவை அளவுக்கு அதிகமாக இழுத்துவிட்டு தெருக்களில் மயங்கி கிடப்பது வாடிக்கையுள்ளது.

ஒவ்வொரு முறையும் கஞ்சா போதையில் ஏதோ ஒரு முட்டுச்சந்தில் மயங்கி கிடக்கும் மகனை தாய் ரமனம்மா வீடு வரை தோல் மீது தூக்கிக்கொண்டு வந்து விடுவாராம்.

எவ்வளவோ சொல்லி பார்த்தும் சிறுவன் கஞ்சா பழக்கத்தை கைவிடாததால், அவனை கம்பத்தில் கட்டி கண்களில் மிளகாய் பொடியை தூவி தண்டித்துள்ளார். மேலும், இனிமேல் கஞ்சா புகைக்க மாட்டேன் என்று சத்தியம் செய் என்றும் ரமனம்மா கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த சம்பவத்தை ராமனம்மாவின் பக்கத்து வீட்டில் இருப்பவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதையடுத்து தீயாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில், வீடியோவை வைத்து ரமனம்மா மீது உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிள்ளைகள் செய்யும் தவறை பெற்றோர்தான் திருத்த வேண்டும். ஆனால், 15 வயதில் பள்ளிக்கும் செல்லாமல் பெற்ற மகன் கஞ்சாவுக்கு அடிமையாகி சாலைகளில் விழுந்து கிடப்பதை பலமுறை கண்டித்தும் பயனில்லாததால் இவ்வாறு செய்ததாக தாய் ரமனம்மா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.