கடனை திருப்பி செலுத்தாததால் அதிகாரிகள் காலில் விழுந்த மதுவந்தி : அதிர்ச்சி வீடியோ!!

537

மதுவந்தி…

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தியின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

கடந்த 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்ற மதுவந்தி,

 

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா அப்பார்ட்மெண்டில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளார்.

 

முதலில் கடனை கட்டிவந்த மதுவந்தி பின் முறையாக பணம்கட்ட தவறியுள்ளார். இதனால் அந்த நிதி நிறுவனம் வட்டிப் பணத்துடன் அசலையும் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாய் பணம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

மதுவந்தி உரிய பதில் அளிக்காத காரணத்தினால், அவரின் மேல் வழக்கு தொடரப்பட்டு மதுவந்தியின் வீட்டை சீல் வைக்க உத்தரவு பெறப்பட்டது.

 

அதன்பின் அதிகாரிகள் மதுவந்தியின் வீட்டை பூட்டி சீல் வைத்துள்ளனர்.