கடைசியாக வந்த போன்கால்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

311

திருவாரூர்….

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவியின் காதல் விவகாரத்தை பெற்றோர் கண்டித்ததால் 15 வயதான அந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி பாரதியார் தெருவை சேர்ந்த தம்பதியின் மகள் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 15 வயதான வனிதா அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த வனிதாவுக்கும் பாமணி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் இருந்ததாகவும் அதை மாணவியின் தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தையின் எதிர்ப்பால் மாணவி வனிதா அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இந்த சூழலில், நேற்று முன்தினம் அந்த வாலிபர் வனிதாவின் செல்லுக்கு கால் செய்து பேசியுள்ளார். அதன் பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு வனிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

சம்பவம் அறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி தூக்கு போட்டுக்கொள்வதற்கு முன்பு வாலிபரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படும் நிலையில் அந்த செல் எண் மற்றும் அது உண்மையில் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை நகர்த்தியுள்ளனர். அதே சமயம், மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து கீழ்கண்ட தற்கொலை தடுப்பு அமைப்புகளின் ஹெல்ப்லைன் எண்களை தொடர்புகொள்ளலாம்.