உத்தரப்பிரதேசம்…
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சர்வேஷ் மற்றும் அவரின் மனைவி சோனம் ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தாலும், சோனத்துக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருடன் கள்ளக்காதல் உருவாகியுள்ளது.
சோனம் தன் கள்ளக்காதலனுடன் அடிக்கடி வெளியே செல்வதும், தனிமையில் உல்லாசமாக இருப்பதுமாக இருந்துள்ளார். மனைவியின் திடீர் மாற்றத்தை கண்ட சர்வேஷ் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது தான் கணவர் சர்வேஷுக்கு சோனம் செய்யும் காரியம் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவிக்குள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. அப்போதெல்லாம் அந்த சோனம் தான் எவரோடும் கள்ள உறவில் ஈடுபடவில்லை எனவும், உங்களுக்கு சந்தேக புத்தி வந்துவிட்டது என கணவரிடம் குறை சொல்ல ஆரம்பித்துள்ளார்.
என்னதான் விஷயம் ஊர் முழுக்க தெரிந்தாலும், தன் மனைவி அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறுகிறாளே என எண்ணிய கணவர் சர்வேஷ் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார். அதனால், சர்வேஷ் அந்த மனைவியை கள்ள காதலனுடன் கையும் களவுமாக பிடிக்க வீட்டில் ஒளிந்துக் கொண்டார்.
அந்நேரத்தில் சர்வேஷ் வீட்டிற்கு சோனத்தின் காதலரும் வந்துள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்கும் போது அதை ஒளிந்து பார்த்த சர்வேஷ் திடீரென்று வெளியே வந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். கணவரை பார்த்த சோனம் மற்றும் அவரின் கள்ளக்காதலன் அதிர்ச்சியில் இருவரும் சேர்ந்து சர்வேஷை போட்டு தள்ளிவிட்டு வீட்டின் பின்பக்கம் இடிபாடுகளுக்கு நடுவே வீசியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சக்கேரி காவல் நிலைய போலீசார் கூறும் போது, ‘முதலில் தனது கணவர் சர்வேஷை சந்திக்க சிலர் இரவு நேரத்தில் வந்ததாகவும், அதிலிருந்து அவரை காணவில்லை எனவும் சோனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பின் நடத்தப்பட்ட சோதனையின் சர்வேஷின் உடன் அவரின் வீட்டின் பின்புறம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்தபோது, தான் மனைவி – சோனம் மற்றொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.
சோனம் தன் காதலனுடன் தனது வீட்டில் இருந்தபோது, அவரது கணவர் அவர்களைப் பிடித்த்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இருவரும் கணவனைக் தீர்த்துக் கட்டியுள்ளனர்’ என போலீசார் தெரிவித்தனர்.