கணவன் – மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! மாத்தறையை உலுக்கிய சம்பவம்!

1069

இலங்கையின் தெற்கே மாத்தறை – கும்பல்கம பிரதேசத்தில் கணவன் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இருவரும் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

குறித்த தம்பதி வசித்து வந்த வீட்டிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்வதற்கு முன்னர் இருவரும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, கடனை மீள செலுத்த முடியாமையால் ஏற்பட்ட மன உளைச்சலே அவர்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தற்சாவடைந்த கணவனும் மனைவியும் முறையே நாற்பத்து மூன்று மற்றும் முப்பத்தொன்பது வயதானவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வான்கிய கடனைச் செலுத்தமுடியாமல் குறித்த தம்பதி சாவடைந்தமையானது அந்த பிரதேசத்தில் மிகப்பெரிய சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்ட்ர்ஹியாளர் கூறுகின்றார்.

இதேவேளை சம்பவம் தொடர்பாக ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர்.