கணவரின் செல்போனில் அதிர்ச்சி ’ஆப்’: உடனடியாக விவாகரத்து கோரிய இளம் பெண்!!

498

ஷாலினி…

பெங்களூரில், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் விக்ரம் என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

வங்கி ஒன்றில் பணிபுரியும் விக்ரமுக்கு இது இரண்டாவது திருமணம். பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் இது.

திருமணத்துக்குப் பிறகு மனைவியை விட்டு ஒதுங்கியே இருந்த விக்ரம், அதற்கு, முதல் மனைவி தன்னை ஏமாற்றிய சம்பவத்தால், அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தன்னை தனியாக விடுமாறும் கேட்டுள்ளார்.

அதை நம்பிய ஷாலினி கொஞ்சம் விட்டுப் பிடித்தார். ஆனால், அதற்குப் பிறகும் ஷாலினி பக்கம் அவர் நெருங்கவே இல்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ஷாலினி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்தார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வீட்டில் இருந்து வேலைபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஷாலினியும் விக்ரமும் வீட்டில் இருந்து பணியாற்றினர்.

ஒரு நாள் தற்செயலாக விக்ரமின் செல்போனை பார்த்தார் ஷாலினி. அப்போது, விக்ரம் பதிவிறக்கம் செய்துள்ள சில ஆப்கள் கண்ணில் பட்டன. வித்தியாசமாக இருந்த ஒரு ஆப்-பை ஓபன் செய்தபோது, அது ஓரின சேர்க்கையாளர்களுக்கான டேட்டிங் ஆப் என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த ஷாலினி, விக்ரமிடம் இதுபற்றி கேட்டார். சரியான பதில் சொல்லவில்லை.

இதன் காரணமாகத்தான் விக்ரம் தன்னை நெருங்கவில்லை என்று நினைத்தார் ஷாலினி. இதையடுத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் செய்துள்ள ஷாலினி, விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.