நெல்லை….
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, இவரது மகள் சசிகலா (29). இவருக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கணவர் உடல்நலக்குறைவால் காலமாகிவிட்டார் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சசிகலா திசையன்விளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்து என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகி உள்ளது.
இந்நிலையில், முத்து சசிகலாவை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சசிகலா இரு முறை கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், திசையன்விளை போலீசார் முத்துவை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சமாதானமாகப் பேசி அனுப்பி வைத்தனர்.
ஆனால் இன்றுவரை சசிகலாவை முத்து திருமணம் செய்யவில்லை மேலும், சசிகலாவை ஏமாற்றி அவரிடமிருந்து பல லட்ச ரூபாய் மற்றும் நகை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா முத்துவின் வீட்டு முன்பு தன்னை திருமணம் செய்ய கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோன்று திசையன்விளை முத்து பேச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா நர்சிங் படித்து முடித்துள்ளார். இவரும் அவரது வீட்டின் அருகே உள்ள அந்தோணி ராஜ் என்பவரது மகன் அஜித் குமாரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பிரியங்காவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உறவு வைத்துவிட்டு ஆந்திராவில் உள்ள வேறொரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரியங்காவை ஏமாற்றி 5 லட்சம் பணம் மற்றும் நகைகளை அஜித் குமார் ஏமாற்றி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னை ஏமாற்றிய அஜித் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியங்காவும் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 2 புகார்களையும் பெற்றுக்கொண்டு திசையன்விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.