கணவரை கத்தியால் குத்தி கிழித்த கொடூர மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

329

கடலூர்…

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர் இளையராஜா (42). இவரது மனைவி அனிதா (35). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அனிதாவும், இளையராஜாவும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், இளையராஜா சென்னையில் தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

அனிதா கும்பகோணம் பந்தநல்லூர் கிராமத்தில் உள்ள அம்மா வீட்டில் வசித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த புதன்கிழமை அன்று இளையராஜா மனைவியை பார்க்க பந்தநல்லூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

அன்று அனிதாவின் வீட்டிலேயே அவர் தங்கிய நிலையில் மறுநாள் காலையில் இளையராஜாவை காணவில்லை. இதனால், இளையராஜாவின் அக்காவும், மனைவி அனிதாவும் சேர்ந்து அப்பகுதியில் தேடி பார்த்த நிலையில் அனிதாவின் வீட்டிற்கு பின்புறம் உள்ள வாய்க்கால் பகுதியில் இளையராஜா பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதை கண்டனர்.

சம்பவம் அறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி வெற்றிவேந்தன் நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

அப்போது, அனிதா மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்ததில் கணவனை கொலை செய்துவிட்டு ஒன்றும் தெரியாததை போல அனிதா நாடகமாடி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அனிதா கொடுத்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது, அனிதாவுக்கும் , இளையராஜாவின் சித்தாப்பா மகனான ஜெயபால் (30) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.

ஜெயபாலை விட்டு தனியாக வசித்து வரும் அனிதா, தான் விரும்பியவாறு ஜெயபாலுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கணவர் இளையராஜாவை அடியோடு ஒதுக்கிவிட்டார் அனிதா.

இந்த சூழலில் இளையராஜா மீண்டும் அனிதாவை சந்திக்க வந்ததால் ஆத்திரமடைந்த அனிதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளையராஜாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு பிணத்தை வாய்க்கால் ஓரம் வீசியுள்ளார். இந்த கொலை வழக்கில் அனிதாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ஜெயபாலுவை தேடி வருகின்றனர்.