கணவரை போட்டுத்தள்ள மனைவி போட்ட பிளேன் : அழுகிய நிலையில் கிடந்த சடலம்!!

281

தனேஷ் சாகு…

குடும்பத்தகராறு காரணமாக கணவரை அவரின் நண்பர்களையே கூலிக் கொ.லைகாரர்களாக பயன்படுத்தி காசு கொடுத்து கொ.லை செ.ய்து காவல்துறையினரையே மிரண்டு போகச்செய்துள்ளார் பெண் ஒருவர்.

சட்டீஸ்கர் மாநிலம் பசந்புர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுர்கி எனும் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டது.

அந்த கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பிணமாக கண்டெடுக்கப்பட்டவரின் இருசக்கர வாகனம் குளத்தினுள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து இது கொ.லையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். பின்னர் விசாரணையில் அந்த நபரின் பெயர் தனேஷ் சாகு என்பதும், அவர் சுர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது

. பின்னர் சிறப்பு போலீஸ் குழுவை அமைத்த காவல்துறையினர் கொ.லையாளிகளை தேடி வந்தனர். இதனிடையே கொல்லப்பட்ட தனேஷ் சாகுவை கடைசியாக அவருடைய நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பார்த்ததாக காவல்துறையினருக்கு முக்கிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கொ.ல்லப்பட்டவரின் நண்பவர்கள் மூவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். கொல்லப்பட்டவரின் மனைவியும் விசாரணைக்கு ஆளானார். இந்த விசாரணையின் போது தனேஷ் சாகு, அடிக்கடி குடித்துவிட்டு தன்னை துன்புறுத்துவார் என்று அவருடைய மனைவி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மைகளை கக்கினார் அவரது மனைவி. தனது கணவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்தியதால், அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்ததாகவும் இந்த கொ.லைக்கு அவரின் நண்பர்களையே ஆயுதமாக மாற்றியதும் தெரியவந்தது.

அதாவது அவருடைய கணவர் தனேஷ் சாகுவை கொல்வதற்காக அவரின் நண்பர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறிய அவரின் மனைவி ஆளுக்கு தலா 7 ஆயிரம் ரூபாயை முன்பணமாக தந்ததாகவும். ஆகஸ்ட் 1ம் தேதி அவர்கள் மூவரும் தனேஷ் சாகுவை குடிக்க வைத்து அவர் மயக்கமான பின்னர் கொ.லை செ.ய்து பிணத்தை மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தனர்.

கணவரின் நண்பர்களையே கூலிக்கு கொ.லை செய்பவர்களாக மாற்றி தனது கணவரை, பெண் கொ.லை செய்த சம்பவம் காவல்துறையினரையே மிரளச் செய்வதாக இருந்தது.