கணவரை வசியப்படுத்த மனைவி செய்த காரியம் : அதிர்ச்சியில் உறைந்து போன உறவினர்கள்!!

393

கேரள…

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தன் மனைவி ஆஷா சுரேஷுடன் கோட்டயம் மாவட்டம், பாலாவில் வசித்துவருகிறார். நல்ல லாபத்துடன் ஐஸ்க்ரீம் பிஸினஸ் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக அவர் சாப்பிட்டவுடன் உடலில் சோம்பல் ஏற்படுவதை உணர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து சதீஷ், மருத்துவரை அணுகியிருக்கிறார்.

உடலில் சர்க்கரையின் அளவு குறைந்ததால், சோம்பல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் கடந்த ஆண்டு சில நாள்கள் சதீஷ் ஓட்டலில் சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போது அவருக்கு உடலில் எந்தச் சோர்வும் ஏற்படவில்லை.

மறுபடியும் வீட்டில் சாப்பிட்டபோது அவர் உடலில் மீண்டும் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த சதீஷ், மனைவியின் தோழி ஒருவரிடம் இது பற்றிக் கூறியுள்ளார். மேலும், மனைவி தனக்கு உணவில் எதாவது கலந்து தருகிறாரா எனவும் பேசி அறிந்து, தன்னிடம் சொல்லும்படி கூறியிருக்கிறார்.

அந்தப் பெண்ணும் ஆஷாவிடம் இது தொடர்பாகப் பேசியபோது, 2015-ம் ஆண்டு முதல் மன நோயாளிகளுக்குக் கொடுக்கும் மருந்தைத் தன் கணவருக்கு சாப்பாட்டில் கலந்து கொடுப்பதாகவும், அப்போதுதான் கணவன், தன் கட்டுப்பாட்டில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை அந்த தோழி சதீஷிடம் கூறியதும், அவர் அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து, சதீஷ் இது பற்றி பாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நன்றாக பிஸினஸ் செய்யும் தன்னைச் சீர்குலைக்க ஆஷாவும், அவர் குடும்பத்தினரும் சேர்ந்து சதி செய்திருப்பதாக சதீஷ் புகாரளித்தார். இது குறித்து வழக்கு பதிந்து ஆஷாவைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.