அமெரிக்கா….
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தை சேர்ந்தவர் சாரா நிக்கோல். ஃபிட்னஸ் பயிற்சியாளரான சாரா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், ரியான் – சாரா தம்பதியினருக்கு குழந்தைகளும் உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில் தான், கடந்த 2020 ஆம் ஆண்டு சாராவின் வாழ்வில் அவரது முன்னாள் காதலர் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதாவது தனது காதலரான ரோனி என்பவருடன் இணைந்து வாழ முடிவு எடுத்துள்ளார் சாரா. ரியான் மற்றும் சாரா ஆகிய இரண்டு பேரும் மற்றவர்களுடன் ஊர் சுற்றுவதை விரும்பி வந்தார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ரியானை திருமணம் செய்வதற்கு முன்பாக தான் காதலித்து வந்த ரோனி, திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் சாராவின் வாழ்க்கைக்குள் வந்ததாக தெரிகிறது.
இது பற்றி, சாராவின் கணவரான ரியானுக்கும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தனது மனைவி சாரா அவரின் காதலருடன் இணைந்து வாழவும் சம்மதம் தெரிவித்துள்ளார் ரியான். அது மட்டுமில்லாமல், மூன்று பேரும் ஒன்றாக இணைந்திருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்படி சமீப காலமாக அவர்கள் இணைந்து வாழ்ந்து வரும் நிலையில், ஒருவருக்கு ஒருவர் மிகவும் ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அத்துடன் ரியான், சாரா மற்றும் ரோனி ஆகிய மூவரும் நன்கு புரிந்து கொண்டும் இணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதே போல, தனது கணவர் மற்றும் காதலருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட விஷயங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் சாரா.