கணவர் மற்றும் மகன் இறந்தது ஏன்? மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பெண்!

653

பிரித்தானியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஏழு ஆண்டுகள் கழித்து மகனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை பாதிப்பு குறித்து தாய் எச்சரித்துள்ளார்.

வுல்லி (48) என்பவரின் மனைவி பியோனா வீர் (51). இவர்களுக்கு ஜோனாதன் மற்றும் சைமன் (28) என இரண்டு மகன்கள் உள்ளனர்.சிறை துறை அதிகாரியாக வேலை செய்து வந்த வுல்லி கடந்த 2010-ஆம் ஆண்டு பணியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தற்கொலை செய்வது கோழைத்தனம் எனவும் அது குறித்த விழிப்புணர்வையும் வுல்லியின் மனைவி வீர் ஏற்படுத்தி வந்தார்.இந்நிலையில் சமூகவலைதளங்களில் புழங்குவதை அதிகளவில் விரும்பிய வுல்லியின் மகன் சைமனுக்கு எதிராக அதிகளவு வெறுக்கத்தக்க பதிவுகள் பதியப்பட்டதால் மனமுடைந்த அவர் கடந்த நவம்பரில் தற்கொலை செய்து கொண்டார்.

பலரின் தற்கொலை எண்ணத்தை தடுத்து வந்த பெண்ணால் தனது சொந்த மகனின் தற்கொலையை தடுக்க முடியவில்லை என எண்ணி அவர் மனமுடைந்து போயுள்ளார்.

அவர் கூறுகையில், என் கணவர் பணி பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்தார், ஆனால் அதை சாதாரணமாக எடுத்து கொண்டேன்.ஆனால் திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார், இது நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து என் மகனும் உயிரை விட்டுள்ளான்.

தற்கொலை செய்வதால் அவர்களின் வலி சரியாக போவதில்லை, அதற்கு பதிலாக இறப்பவர்கள் யாரை விட்டு செல்கிறார்களோ அவர்களுக்கு அந்த வலி சென்றுவிடும் என்பதை மறக்காதீர்கள்.

நான் சொல்வதை நன்றாக யோசித்தால் தற்கொலை எண்ணமே வராது என உருக்கமாக கூறியுள்ளார்.