கண்டித்த மனைவி.. கண்டுக்காத கணவன் : மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

285

சேலம்….

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவரது மனைவி பெயர் மரகதம் (வயது 30). வீட்டுக்குள் தோண்டப்பட்ட ‘குழி’.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன அண்ணன்.. தூங்கியதால் சிக்கிய ‘தம்பி’

இந்த தம்பதியருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பமாக, அடுக்குமாடி வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.

மேலும், தங்களின் வீட்டின் அருகிலேயே, சொந்தமாக பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பெரிய கம்பெனி ஒன்றையும் பிரபாகரன் நடத்தி வந்துள்ளார். உரம் பேக்கிங் செய்யும் பிளாஸ்டிக் பை தயாரித்து, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியும் செய்து வந்துள்ளார்.

இதனிடையே, தனது உறவினர் ஒருவர், மோரூர் பகுதியில் நடத்தி வரும் தனியார் பஸ் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றிற்கு, அடிக்கடி சென்று வருவதை பிரபாகரன் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த சமயத்தில், அங்கு வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கும், பிரபாகரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மொபைல் போன் மூலம், மணிக்கணக்கில் பேசவும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்த பிரபாகரன், அவரை பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவருக்கும் இடையில், கள்ளக்காதலும் உருவாகியுள்ளது. இதன் பெயரில், இருவரும் தனியாகவும் இருந்து வந்துள்ளனர். இதனிடையே, பிரபாகரனின் தவறான உறவு பற்றி, அவரின் உறவினர் ஒருவருக்கு தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, மனைவி மரகதத்துக்கும் கணவரின் போக்கு பற்றி தெரிய வந்துள்ளது. அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, கள்ளக்காதலைக் கைவிடவும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், இதனை பிரபாகரன் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே சென்ற பிரபாகரன், இரவு நேரத்தில், அந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று தங்குவதை வாடிக்கையாக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதன் பெயரில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே, கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நேரங்களில், சண்டை போட்டு விட்டு, தன்னுடைய வீட்டிற்கும் மரகதம் சென்றுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் வீட்டில் வைத்து சண்டை ஏற்பட்டுள்ளது.

யார் முக்கியம் என கேட்டு மரகதம், கணவரிடம் முறையிட்டுள்ளார். விவகாரம் பெரிதான நிலையில், இருவரையும் உறவினர்கள் சமாதானம் செய்துள்ளனர். இவ்வளவு பெரிய விவகாரம் ஆன போதும், மீண்டும் கள்ளகாதலியின் வீட்டிற்கு பிரபாகரன் சென்றுள்ளார்.

இதனால், மரகதம் அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். எத்தனை சொல்லியும் கணவர் கேட்காததால், மனமுடைந்த மரகதம், தன்னுடைய குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில், வீட்டில் அருகே அமைந்துள்ள தோட்டத்தின் விவசாய கிணறு ஒன்றிற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மரகதம் சென்றதாக கூறப்படுகிறது.

தனக்கு நீச்சல் தெரியும் என்பதால், தான் பிழைத்த விடக் கூடாது என்பதற்காக, தன்னை இறுக்கமாக கயிற்றினைக் கொண்டு கட்டியுள்ளார். பின்னர், கயிற்றின் மறுமுனையை கல் ஒன்றில் கட்டி வைத்து விட்டு, கிணற்றில் குதித்துள்ளார் மரகதம். இதில், நீரில் மூழ்கிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மறுநாள் காலை, பிரபாகரன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தைகளை அங்கு காணவில்லை. தொடர்ந்து, அப்பகுதியில் தேடி பார்த்த போது, அங்குள்ள கிணற்றில், மனைவி மற்றும் குழந்தைகள் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கே உடைந்து அழுத பிரபாகரன், பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி, மரகதம் மற்றும் ஒரு குழந்தைகளின் உடலை மீட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசாரும் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரின் கள்ளக்காதலின் பெயரில், தன்னுடைய குழந்தைகளுடன் பெண் எடுத்துக் கொண்ட முடிவு, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.