கண் திருஷ்டி இருந்தால் இதெல்லாம் நடக்குமாம்! உடனே இதை செய்திடுங்கள்!!

1752

கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி என்றும் அதை சரிசெய்வது எப்படி என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி?திருஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம்.

வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என்று ஒவ்வொரு கஷ்ட நிலைகளை சந்திக்க நேரிடும்.அதோடு கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவையும் உண்டாகும்.

கண் திருஷ்டி கழிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்?
திருஷ்டியை கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. ஆனால் திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி பட்டவரை விட வயதில் மூத்தவராக இருக்க வேண்டும்.

திருஷ்டிக் கழிக்கும் நாட்கள் செவ்வாய் அல்லது ஞாயிறு மாலைப் பொழுதாக இருக்க வேண்டும். கிழக்குத் திசையை நோக்கி நின்று கொண்டு திருஷ்டிக் கழிக்க வேண்டும்.

திருஷ்டியை கழிப்பது எப்படி?வாசலில் அல்லது வீட்டிற்கு வருகிறவர்களின் கண் படும்படியான இடத்தில் பெரிய பாத்திரத்தில் பூக்களை மிதக்க வைக்கலாம்.

வீட்டு வாசலில் ஒரு ரோஜா செடி வைக்க வைக்கலாம். ஏனெனில் ரோஜா செடியில் உள்ள முட்கள் திருஷ்டியை போக்கி விடும்.வீட்டின் வாசலில் பூசணிக்காய், அகோரமான பொம்மை ஆகியவற்றை தொங்க விடுவதை விட இயற்கைத் தாவரங்கள், வாழை, செடி கொடிகள் போன்றவற்றை வைக்கலாம். ஏனெனில் இவைகள் எந்த திருஷ்டியையும் நெருங்க விடாது.

வீடு மற்றும் அலுவலகத்தில் வைக்கும் மீன் தொட்டியை வருகிறவர்களின் பார்வையை திசை திருப்பும் பொருட்டு மீன் தொட்டியை வைக்க வேண்டும்.குளிக்கும் போது அந்த நீரில் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல், அலர்ஜி ஆகியவை நீங்கும். அதுவும் பிறந்த கிழமைகள் அல்லது செவ்வாய் கிழமைகளில் இம்முறைப்படி குளிக்கலாம்.

வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் கற்றாழை கட்டி தொங்க விடலாம். வாசலில் ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என்று இரண்டையும் மாற்றி மாற்றி கோர்த்து தொங்க விடலாம்.

படிகாரக் கல்லை கொண்டு திருஷ்டிக்கு ஆளான நபரை கிழக்கு நோக்கி உட்கார வைத்து தலையை மூன்று முறை வலமிருந்து இடமாகவும், பின் இடமிருந்து வலமாகவும் மூன்று முறை தலையிலிருந்து பாதம் வரை மேலிருந்து கீழாக இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும்.

கண் திருஷ்டியானது குழந்தைகளை பாதித்தால், செப்பு காசை குழந்தையின் கையில் கட்ட வேண்டும். இதனால் துஷ்ட சக்திகளும், கண் திருஷ்டியும் அண்டாது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அதில் உங்களின் முகம் தெரியுமாறு பார்த்து மூன்று முறை உங்கள் பெயரைச் சொல்லி, அதனை யாருக்காவது தானமாக கொடுத்து விட வேண்டும்.

கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. குறிப்பாக இம்முறையை குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.

கடுகு, உப்பு, 3 மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டு விட வேண்டும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக் கிழமையில் செய்ய வேண்டும்.