கனரக வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதி பயங்கர விபத்து : சம்பவ இடத்தில் 16 பேர் பரிதாபமாக பலி!!

542

உத்தர பிரதேச மாநிலத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் சரக்கு வாகனம் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தின் சச்செண்டி பகுதியில் உள்ள கான்பூர்-அலகாபாத் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. அதிவேகத்தில் வந்த பயணிகள் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதி பள்ளத்தில் விழுந்து குப்புற கவிழந்துள்ளது. இதில் சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்து சுக்கு நூறாக சிதைந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் சம்பவயிடத்திலேயே பலியானதாக பொலிஸ் உயர் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இறந்தவர்கள் உடல்கள் குவியலாக டெம்போ வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி காண்போரை கலங்க வைத்துள்ளது.

20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிலரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிழந்துவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும்,விபத்தில் உயிழந்தவர்களுக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேபோல், விபத்தில் உயிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.