கருவாட்டை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

877

கருவாட்டின் ருசியை சுவைக்காத அசைவ பிரியர்கள் யாரும் இருப்பார்களா என்ன?கருவாட்டின் வாசனை பிடிக்காதவர்கள் கூட அதனை ருசிக்க மறக்கமாட்டார்கள்.அசைவ உணவுகளிலேயே அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான்.

கருவாடு, மீன், நண்டு போன்ற உணவுகள் சாப்பிடும் போது மோர், தயிர் மற்றும் கீரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் இது புட் பாய்சனுக்கு வழிவகுத்துவிடும், அந்த வகையில் கருவாடை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என தெரிந்து கொள்ளலாம்.

கருவாட்டை சமைக்கும் போது மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி போன்றவற்றை சேர்த்து சமைத்தால் ஆரோக்கியமானதாக இருக்கும், இதனை குடித்தாலும் அஜீரணக் கோளாறு, மந்தம், பசியின்மைக்கு தீர்வாகிறது.

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளவர்கள் உப்பு அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சருமப் பிரச்சனை மற்றும் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் கருவாடு சாப்பிடாமல் இருத்தல் நலம்.