கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் நண்பனின் மனைவிக்கு கயவர்கள் செய்த கொடூரம்!!

754

திருவாரூர் மாவட்டத்தில் இளவரசன் என்பவரின் கர்ப்பிணி மனைவியை அவரது நண்பர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசன் திருப்பூரில் வேலை பார்த்த போது அவருடன் ஒன்றாக வேலை செய்து வந்த அவரது நண்பர்கள் நித்தையன், பூவரசன் ஆகிய இருவரும் பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து ஊருக்கு வந்தனர்.

ஊருக்கு வந்த இடத்தில் இளவரசன் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து பேட்டை கோவில் திருவிழாவிற்கு வருமாறு அழைத்தனர்.

நண்பர்களின் அழைப்பை ஏற்று இளவரசன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நண்பர்களுடன் புறப்பட்டு சென்றார். அங்கு சென்றதும் நித்தையனும், பூவரசனும் கோவில் திருவிழாவுக்கு காவடி கட்டும் வேலையை இளவரசனிடம் செய்யுமாறு கூறினர். இதனையடுத்து காவடி கட்டும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது நித்தையனும், பூவரசனும் அங்கிருந்து புறப்பட்டு இளவரசனின் வீட்டிற்கு வந்து அப்பெண்ணை மாறிமாறி பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்துவீட்டார் ஓடி வந்துள்ளனர். உடனே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.