கறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்கள்: முடி நீளமாக வளருமாம்..!

1374

கறிவேப்பிலையில் மூலிகை குணங்கள் ஏராளமாக இருப்பதால், அது உடல் ஆரோக்கியத்திற்கும், அழகு குறைபாடுகளை போக்கவும் உதவுகிறது.

அதுவும் தலைமுடியை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கும் செழுமையாக வளர்வதற்கும் கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.

கறிவேப்பிலை டீ

2 டம்ளர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை முதல் நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் காலை அதனுடன் சிறிதளவு சீரகம், இந்துப்பு கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர முடி நன்கு வளருவதுடன், இளநரை சரியாகும்.

நெல்லி-கறிவேப்பிலை ஜூஸ்

3 நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி, ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து, அதை வடிகட்டி குடித்து வந்தால் வலுவான, அடர்த்தியான கூந்தலாக வளரும்.

கறிவேப்பிலை சாதம்

கறிவேப்பிலை, உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை மிதமான தீயில் வதக்கி, பொடி செய்துக் கொண்டு, அதை வாணலில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் கலந்து வடித்த சாதத்தையும் சேர்த்து கிளறி கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டு வரலாம்.

கறிவேப்பிலை துவையல்

1 டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை வாணலியில் வறுத்து எடுத்துக் கொண்டு அதன் பின் சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, இரண்டு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி, உப்பு, தேங்காய், சிறிதளவு புளி சேர்த்து கெட்டியாக அரைத்து துவையலாக வாரம் இருமுறை சாப்பிட்டுவர முடி உறுதியாகி, முடி உதிர்தல் பிரச்னை நின்றுவிடும்.

கறிவேப்பிலையை வேறு எப்படி பயன்படுத்துவது?

நிழலில் உலர்த்திய கறிவேப்பிலையுடன் மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவற்றை பொடியாக்கி, சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட, முடி நன்கு வளரும்.
கறிவேப்பிலை இலைகளை அரைத்து அதில் சிறிதளவு எடுத்து 40 நாள்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, முடி நன்றாக வளரும்.
கறிவேப்பிலையை அரைத்து அடை போல் தட்டி அதை நன்கு காயவைத்த பின் தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, தொடர்ந்து தலைக்குத் தேய்த்து வர முடி செழுமையாக வளரும்.
கறிவேப்பிலை இலையில் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்து அவ்வப்போது அந்தப் பொடியை தலைக்குத் தேய்த்து வர நரை பிரச்னைகள் நீங்கும்.
கறிவேப்பிலையுடன் இரண்டு மிளகு சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கி முடியும் செழித்து வளரும்.