கல்லறைகளில் இருந்து உடல் பாகங்களை கொள்ளையிடும் கும்பல்: அதிர்ச்சி காரணம்!!

516

பிலிப்பைன்ஸ் நாட்டில் கும்பல் ஒன்று கல்லறைகளில் இருந்து மனிதர்களின் உடல் பாகங்களை திருடி, அதில் இருந்து மாயமாகும் சக்தியை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் Haring Bakal என அறியப்படும் இந்த கும்பல் கல்லறைகளில் புதைக்கப்பட்டிருக்கும் சில நாட்கள் பழமையான சடலங்களின் உடல் பாகங்களை கொள்ளையிட்டு வருகின்றனர்.

அதனை வினோதமான முறையில் பூஜை செய்து பயன்படுத்தினால் தங்களுக்கு அமானுஷ்ய சக்தி கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

திருடப்படும் உடல் பாகங்களை தங்கள் இடையில் கட்டிக் கொண்டாலோ அல்லது அதன் ஒரு பகுதியை வாய்க்குள் திணித்து வைத்திருந்தாலோ தங்களால் மாயமாக முடியும் என குறித்த கும்பலில் உள்ள உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் கிறிஸ்தவர்களின் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறும் அவர்,அதனால் கிடைக்கும் அந்த சக்தியானது நமது இல்லங்களையும் குடியிருப்பையும் பாதுகாக்கும் எனவும், அதுவே நமக்கு வழிகாட்டியாக செயல்படும் எனவும் அவர் உறுதிபட தெரிவிக்கின்றார்.

எதிரிகளுடன் போராட நேர்ந்தால் நமக்கே எப்போதும் வெற்றி கிடைக்கும் என கூறும் அவர், தொடர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும் எனவும் இல்லை எனில் அதுவே நம்மை சிக்கலில் கொண்டு விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

விசேட பூஜை செய்த உடல் பாகம் ஒன்றை வாய்க்குள் திணித்து வைத்துக் கொண்டால் எதிரிகள் ஒருபோதும் நம்மை கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1970-களில் துவங்கப்பட்ட இந்த குழுவானது அப்போது பல வெற்றிகளை குவித்துள்ளது என கூறும் அந்த நபர், தற்போது சுமார் 100 உறுப்பினர்களை கொண்ட அரிய குழுவாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கல்லறைகளில் இருந்து சடலங்களை கொள்ளையிடுவது என்பது சட்டவிரோதம் என்றாலும் சில வேளைகளில் உரிய பணம் செலுத்தி தேவையான உடல் பாகங்களை பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.