கள்ளகாதலனுக்கு பெற்ற மகளை அனுப்பிய தாய் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

681

கேரளா….

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா (33). கணவனை இழந்த ஸ்மிதா தனது 11 வயது மகள், பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2017இல் ஸ்மிதாவுக்கு அஜி (46) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் உறவினருக்கு தெரியாமல் கணவன், மனைவி போல நெருங்கி பழகி வந்துள்ளனர்.

கணவனை இழந்த ஸ்மிதாவுக்கு உல்லாச காதலனாக இருந்து வந்த அஜிக்கு ஸ்மிதாவின் 11 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை தாயான ஸ்மிதாவிடமே அஜி கூறியுள்ளார். இதற்கு சற்றும் மறுக்காத ஸ்மிதா, மகளான சிறுமையை கள்ளகாதலனின் இச்சைக்கு இரையாக்க துணிந்தார்.

அதன்படி, சம்பவத்தன்று ஒரு காலி வீட்டில் அஜி தயாராக இருக்க, சிறுமியை வலுக்கட்டாயமாக ஸ்மிதா அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை அஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோனி போலீசார் வழக்கு பதிவு செய்து அஜி மற்றும் சிறுமியின் தாய் இருவரையும் கைது செய்தனர். சிறுமியை பலாத்காரம் செய்ததாக அஜி மீதும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஸ்மிதா மீதும் பதிவான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், அஜி (46) அவரது காதலி ஸ்மிதா (33) ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் ஜான் கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

மேலும், முதல் குற்றவாளியான அஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.75,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அதுபோல, சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த ஸ்மிதாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.