கள்ளக்காதலிக்காக திருடனாக மாறிய பட்டதாரி இளைஞர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

950

கன்னியாகுமரி…..

எஸ்.டி மாங்காடு பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பவர் எம்.பி.ஏ படித்து பட்டம் பெற்றவர். சிறு வயதில் இருந்தெ சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், எட்வின் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது.

இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து வந்திருக்கிறார். ஒரு பக்கம் சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் எட்வின், பார்ட்-டைமில் கொத்தனாராகவும் வேலை செய்திருக்கிறார்.

அங்கு, வேலையில் சந்தித்த ஒருவருடன் நட்பு பாராட்டி, அவருக்கே தெரியாமல் அவரது மனைவியுடன் உறவு கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், அவ்வப்போது திருடும் பொருட்களையும் பணத்தையும் அந்த கள்ளக்காதலியிடம் ஒப்படைத்து, ஊர் சுற்றியிருக்கிறார் எட்வின்.

பணமும் நகைகளையும் கண்டு கள்ளக்காதலி மயங்கிய நிலையில், குறைந்தது வாரம் ஒரு முறையாவது திருடினால் மாதம் ஒரு சுற்றுலாவும், கார் பங்களா போன்றவற்றை வாங்கலாம் என அவள் ஆசை காட்டியதால், அதனை ஒப்புக்கொண்ட எட்வின், தொடர் திருட்டில் ஈடுபட்டிருக்கிறார்.

முதல் பெரிய திருட்டாக மாங்கான் பகுதியில் ஒரு வீட்டில் திருடியதோடு, வீட்டு வாசலில் இருந்த புல்லட் பைக்கையும் ஓட்டி சென்றுள்ளார் எட்வின். தொடர்ந்து, திருட்டை நடத்தி வந்த நிலையில், கேரளா மற்றும் கன்ண்டியாகுமரி பகுதிகளில் இந்த காதல் கிறுக்கனின் கைரேகைகள் பதிவாகி இருக்கிறது.

கேரளாவில் இது வரை 40க்கும் மேற்பட்ட வீடுகளிலும், கன்னியாகுமரியில் 21க்கும் மேற்பட்ட வீடுகளில், சுமார் 25 சவரனுக்கும் மேல் தங்க நகைகள், பணம் திருடி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், திருடியவற்றை பணமாக்கி காதல் ஜோடிகள் இன்ப உலாவில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்டும் பிடிபடாத நிலையில், எகத்தாளம் ஆன எட்வினுக்கு, மேலும் அதிக திருட்டில் ஈடுபட வேண்டும் என்ற வெறி வந்து, தமிழ்நாட்டின் மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு வீட்டில் கிட்டத்தட்ட 32 சவரன் நகைகளுக்கும் மேல் திருடும் போது கையும் களவுமாக பிடிப்பட்டார் எட்வின்.

பின் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டு, தனது காதலி சொல்லி தான் அனைத்து திருடுகளையும் செய்ததாகவும், “பொன்னியின் செல்வன்” பட பாணியில், “எல்லாம் அவளுக்காகத்தான்” என வசனங்கள் பேசி வாயிலேயே மிதி வாங்கியிருக்கிறார் எட்வின்.

திருடுகளில் ஈடுபட்ட எட்வின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் காவல் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். மேலும், தூண்டுதல் குற்றத்திற்காக அவர் கூறிய கள்ளக்காதலிக்கு போலீசார் வலை வீசி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

காதல் நம் அனைவரையும் மாற்றும், காதல்லித்து பார் என்றெல்லாம் கவிஞர்கள் கூறும்போது நகைச்சுவையாக இருந்தது. ஆனால், தற்போது உண்மையில் பட்டதாரி திருடனாக்கிய காதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.