கழிவறை இருக்கை திருட்டு… முரட்டு தனமாக நடந்துக் கொள்ளும் ஊர் மக்கள்!! நடந்தது என்ன?

1310

உத்திரப்பிரதேசம்…..

உத்திரப்பிரதேசத்தில் திருடியதாக கூறி இளைஞர் ஒருவரின் முகத்தில் கரியை பூசி, தலையில் மொட்டையடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த நபர் பஹ்ரைச் பகுதியில் உள்ள வீட்டில் கழிவறை இருக்கையை திருடியதாகக் கூறி, இப்பகுதி மக்கள் 30 வயதான கூலித்தொழிலாளி ராஜேஷ் குமார் என்பவரை உள்ளுர் நிர்வாகியுடன் இணைந்து கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.

இவரை தாக்கியதுடன் மட்டும்விடாமல் அவரது முகத்தில் கரியை பூசி, தலையிலுள்ள தலைமுடியை மொட்டையடித்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் வீடியோ வைரலான நிலையில், சம்பவத்தில் ஈடுப்பட்ட அப்பகுதியை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்ததுடன் தலைமறைவாகி ஊர் நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.