கவனக்குறைவால் ப றிபோன 20 வயது தா யின் உ யிர் : தவிக்கும் பச்சிளம் குழந்தை!!

445

கவனக்குறைவால்..

தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாயாவுக்கு, நேற்று முன்தினம் காலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு பிரசவத்துக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவருக்கு, பெண் மருத்துவர் பிரசவம் பார்த்தனர். அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில் நள்ளிரவில் திடீரென மாயா இ றந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு அ திர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கதறி அ ழுதனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து மாயாவின் சா வில் ம ர்மம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ், ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் உ யிரிழந்த மாயாவின் உ டலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் மாயாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும்,

அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கூறி அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போ ராட்டத் தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ப ரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், போ ராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த தனியார் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை. நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு 7 மணி வரை குழந்தையையும், தாயையும் எங்களிடம் காண்பிக்கவில்லை.

எனவே மாயாவின் சா வில் ம ர்மம் இருக்கிறது. இது தொடர்பாக முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று அவர்கள் போ ராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ச ந்தேக ம ரணம் என்று வழக்குப்பதிவு செய்து, போலீசார் வி சாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் நல பிரிவு டாக்டர்கள், அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று, மாயாவுக்கு பிறந்த குழந்தை நலமாக இருக்கிறதா? என்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.