காதலனின் மோசமான செயலில் மனமுடைந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீதம்!!

977

கேரள மாநிலம்……

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு ஆலமிப்பள்ளியில் ஆட்டோ டிரைவராக இருந்து வருபவர் வினோத் குமார். இவரது மனைவி கே.எஸ்.மினி. இவர்களுடைய ஒரே மகள் நந்தா வினோத். இவர் கண்ணங்காட்டிலுள்ள சி.கே.நாயர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.

அதே பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஷுகைப். நந்தாவும், அப்துல் ஷுகைப்பும் ஒரே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். இருவருடைய நட்பு நாளடைவில் காதல் வலையில் வீழ்ந்தது. இருவரும் நெருக்கமாக இருந்த சமயங்களில் அப்துல் ஷுகைப் அவற்றை போட்டோக்கள் எடுத்து பத்திரப்படுத்தியிருந்தான்.

இவரை தொடர்ந்து மற்றொரு பெண்ணையும் அப்துல் ஷூகைப் லவ்ஜிகாத்தில் வீழ்த்திய பிறகு நந்தாவிடமிருந்து விலக முயற்சி செய்தான். நந்தாவோ, காதலை முறித்துக்கொள்ள விரும்பாததால் அப்துல் ஷுகைப்புக்கு அடிக்கடி போன் செய்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி இருக்கிறார்.கண்டுகொள்ளாமல் பிளாக் லிஸ்டில் போட்ட பிறகு உறவினர்கள், நண்பர்கள் எண் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் நந்தா.

இந்நிலையில், அக்டோபர் 31ம் தேதி வீடியோ காலில் அப்துல் ஷுகைப்பை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் நந்தா. அதற்கு, தன்னை விட்டு விலகாவிட்டால் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளான் அப்துல் ஷுகைப்.

இதனால், அதிர்ச்சியடைந்த நந்தா, வீட்டின் மாடியிலுள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நந்தாவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாட்சியாக நந்தா கடைசியாக அப்துல் ஷுகைப்புடன் வீடியோ காலில் பேசியது தெரியவந்தது.

இதன் அடிப்படையில் அப்துல் ஷுகைப்பை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது 15 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.

இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இது போன்ற தற்கொலைகள் அதிகரித்து வருவது பெரும் கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.