காதலனை கட்டிப்போட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் : அரங்கேறிய கொடுமை!!

265

ராமநாதபுரம்….

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில் எடுத்து விசாரணையை துவங்கினர்.

கடந்த மார்ச் 23ல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள பாளையம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் சுற்றுலா வந்த நிலையில் அப்போது கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த பத்மேஸ்வரன், தினேஷ் குமார், அஜித்குமார் ஆகிய இளைஞர்கள் காதல் ஜோடியை மிரட்டி, காதலனை கட்டிவைத்து நகை, செல்போன் உள்ளிட்ட பறித்துக் கொண்டு கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதில் மனமுடைந்த காதலன் ஹரிகிருஷ்ணன் மார்ச் 27ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது தன் கண் முன்னே காதலியை இளைஞர்கள் கூட்டு பலாத்காரம் செய்ததால் மனமுடைந்து விஷம் அருந்தியதாக ஹரிகிருஷ்ணன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார்கள் இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சாயல்குடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவாளிகள் 3 பேரையும் கடலாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சாயல்குடி போலீசார்கள் மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலாடி நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து தற்போது சாயல்குடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையை துவங்கியுள்ளனர். விசாரணைக்கு பின்னர் நாளை மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.