காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலி… வெளியான அதிர்ச்சி காரணம்!!

1275

திருவனந்தபுரம்……

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்த இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் வெளியெ சென்றதை அறிந்து கடந்த 14ம் தேதி ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். இதனை சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உடனே அவர் பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இளம்பெண் கொடுத்த ஜூஸ் குடித்ததால் தனது மகன் உயிரிழந்ததாக தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காதலி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்திய போது ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்வதற்காக ஜூஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷாரோனை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.

ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.