ராணிப்பேட்டை….
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இளம்பெண் வீட்டிற்கு தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் அந்த இளம்பெண்னை கண்டித்தாகவும் அதனால் அந்த இளம்பெண் இளைஞரிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளைஞர் ஜெகதீஷ் இன்று மாலை கைபேசி மூலம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு அப்பகுதியில் உள்ள கன்னி கோவில் அருகே பேச அழைத்துள்ளார்.
அதன்படி அங்கு சென்ற இளம்பெண்ணுக்கும், இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் அந்த பெண் கோவிலில் இருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர் அந்த பெண்னை பின் தொடர்ந்து வீட்டின் அருகே மடக்கி பிடித்து கழுத்து, வயிறு, கை போன்ற பகுதியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
ரத்த வெள்ளத்தி்ல் கீழே சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் 108 ஆம்புலன்ஸ் முலம் மீட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் ஆபத்தான நிலைமையில் இருந்த இளம்பெண்ணுக்கு மருத்துவர்கள் தீவிர முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றினர். மேலும், இந்த இச்சம்பவம் அறிந்த காவேரிப்பாக்கம் போலீசார் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்னிடம் நடந்த சம்பவத்தை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெகதீஷை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.