தேனி….
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரம் அந்தோனியார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (26). இவர் அப்பகுதியில் தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் வசிக்கும் அதே பகுதியில் அரிய வீரபத்திரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமலதா (24). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி செய்து வருகிறார்.
இந்த நிலையில் முத்துராஜ் அந்த பெண்ணை 10 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் ஹேமலதா அந்த வாலிபர் முத்துராஜின் காதலுக்கு தற்போது மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இருப்பினும் முத்துராஜ் விடாமல் ஹேமலதாவை துரத்தி அவரை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் அவரது பேச்சுக்கு அசராத ஹேமலதா திட்டவட்டமாக அவரது காதலி இருக்க மறுத்துள்ளார்.
அவரது பதிலில் அதிருப்தி அடைந்த முத்துராஜ் இன்று ஹேமலதா வீட்டில் இருந்தபோது அவரிடம் சென்று தகராறு ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது கண்ணை ஆத்திரம் மறைத்ததால் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹேமலதாவின் கழுத்து பகுதி மற்றும் கையில் குத்தி கொலை செய்யும் முயற்சி கொடூரமாக தாக்கியுள்ளார்.
அப்போது ஹேமலதாவின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் முத்துராஜை தடுத்து நிறுத்தி ஹேமலதாவை நீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பெரியகுளம் காவல்துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் முத்துராஜை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்த பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி கொலை முயற்சியில் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.