காதலியை பார்க்க பாகிஸ்தான் பார்டர் தாண்டிய பிரசாந்த்..! பின் நடந்த பகீர் பின்னணி !!

535

ஆந்திர……..

மறைந்திருந்து பார்த்து மலர்ந்த காதல்..! பார்க்காமலேயே கடிதத்தால் சேர்ந்த காதல்..! காதலுக்கு மரியாதை என்றால் கண்டதும் காதல்..! என பல விதமான காதல் சினிமாக்களை பார்த்து ரசித்த நம்மவர்களுக்கு நம்ம சாப்ட்வேர் என்ஜினீயர் பிரசாந்தின் நாடு கடந்த காதல் நிறைய வலியும், கொஞ்சம் காஸ்ட்லியுமானது..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரசாந்த், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது முக நூலில் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். முகநூலில் உண்மை முகம் காட்டாத காதலியை நெஞ்சம் உருகிக் காதலித்துள்ளார். ஒரு நாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அகமகிழ்ந்து போனதால், அவரை நேரில் பார்ப்பதற்காக 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் ச.ட்.ட.வி.ரோ.த.மாக நுழைந்துள்ளார் நம்ம காதல் இளவரசன் பிரசாந்த்..!

அவரோட துரதிர்ஷ்டம் காதலியைக் கண்டு அவளது இதயச்சிறையில் அடைபடும் முன்பே, அவரை கை.து செ.ய்.த பாகிஸ்தான் காவல்துறை இஸ்லாமாபாத் சிறையில் அடைத்தது. பிரசாந்த் பணி நிமித்தமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் பொய் சொல்லியிருந்த நிலையில், தனது மகன் 2 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு ராவ் சைபராபாத் மாதபூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பிரசாந்த் காணாமல் போனது குறித்து 2019 ஏப்ரல் மாதம் வ.ழ.க்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் காதலியை தேடிச்சென்று தாடியுடன் காத்திருந்த பிரசாந்த், பாகிஸ்தானில் இருந்து வெளியேற இயலாமல் தவிப்பதாக செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 4 வருடங்கள் கடந்த நிலையில் இந்த வீடியோ பாபுராவின் கண்களில் பட , இதனை ஆதாரமாகக் கொண்டு தன் மகன் பிரசாந்த் பாகிஸ்தானில் தவித்துக் கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரை உடனடியாக மீட்டுத் தரும்படி தந்தை பாபுராவ், சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரிடம் வேண்டுகோள் வைத்தார்.

இதனை வைத்து, மாநில அரசுக்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் காவல் ஆணையர் சஜ்ஜனார் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசி, நாடு திரும்ப இயலாமல் தவித்த பிரசாந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, பிரசாந்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டது. அதன்படி வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் பிரசாந்தை பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். காதலியைத் தேடி சென்ற தன் மகன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தாரின் தொடர்ச்சியான முயற்சியால் புதன் மாலை ஐதராபாத் அழைத்து வரப்பட்டு, வியாழக்கிழமை தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்தார்.

மகனின் வருகையால், மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். மேலும் விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்துத் தரப்பினருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்த அந்த 4 வருடத்திலும், எப்படியாவது தனது காதலியை சந்தித்து விடமாட்டோமா ? என்ற தவிப்பிலேயே நாட்களை நகர்த்தி வந்த பிரசாந்த், தனது காதல் உண்மை என்றும் எப்படியும் தனது காதலி தனக்கு கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தவர் இப்போது தான் ஒரு தெளிவான மன நிலைக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் பிரசாந்திடம் பெண் பெயரில் பழகியது ஃபேக் ஐடியாக இருந்தால் பிரசாந்தின் நாடுகடந்த காதல், நித்தியின் இல்லாத கைலாசா தீவுக்கு வழி தேடுவது போன்றதாகிவிடும்..!