காதல் மன்னன் ஜெமினி கனேசன் – சாவித்ரி மகள் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே!

1084

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்கிற அந்தஸ்தைப் பெற்று உச்சத்தை தொட்ட நடிகையாக இருந்தவர் நடிகை சாவித்திரி தேவி.

இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தைப் பார்த்து பல பிரபலங்கள், படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஷ்வினையும், இதில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷையும் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை எடுக்க, அஷ்வினுக்கு உதவியாக இருந்தவர். சாவித்திரி – ஜெமினிகணேசன் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்த இரு ஜாம்பவான்களின் மகளாக விஜய சாமுண்டீஸ்வரி இருந்தாலும் பலரும் மிகவும் எளிமையாக இருப்பவர். அதிகளவில் இவரை யாரும் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபலங்கள் அனைவரும் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கீர்த்தி சுரேஷுடன் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார். மேலும் இவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

‘விஜய சாமுண்டீஸ்வரி’ என்று சாவித்திரி இவருக்கு பெயர் விதத்திலும் ஒரு அர்த்தம் உள்ளது. சாவித்திரியின் சினிமா வாழ்க்கையில் ஏணியாக இருந்தவர்கள் விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தார். மேலும் இவர் விரும்பி வணங்கி வந்த பெண் கடவுள் சாமுண்டிஸ்வரி.

இதனால் தன்னுடைய மகளுக்கு ‘விஜய சாமுண்டீஸ்வரி’ என பெயர் சூடினார் சாவித்திரி. சாவித்திரி – ஜெமினி கணேசனை திருமணம் செய்துக்கொண்டதும் சாமுண்டீஷ்வரி கோவிலில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.