காதல் மோகத்தால் கர்ப்பம் தரித்த இளம்பெண் : காதலன் எடுத்த முடிவால் நேர்ந்த கதி!!

460

திருவண்ணாமலை…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் அழகுசேனை கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அரவிந்த்குமார் (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்போனில் ராங்கால் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து காதலர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.

இந்நிலையில் காதல் மோகத்தால் இளம்பெண் காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் 5 மாதம் கர்ப்பமாகி உள்ளார்.

இதுகுறித்து அந்தப்பெண் தனது காதலன் அரவிந்த் குமாரிடம் கூறியுள்ளார். கர்ப்பமாக உள்ள விஷயம் வெளியில் தெரிவதற்குள் என்னை திருமணம் செய்துக்கொள் எனக் காதலனை இளம்பெண் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் காதலன் திருமணம் செய்ய மறுத்துள்ளதால் இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் காதலன் அரவிந்த்குமார் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இளம்பெண்ணை கர்ப்பம்மாக்கி திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர்.