கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்!!

304

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியரான மோகன்பாபு, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி கிரிக்கெட் விளையாடியபோது அதே ஊரை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு புத்தாண்டை ஒட்டி மோகன்பாபு நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது அங்கு சென்ற 6 இளைஞர்கள் அவரை கத்தியால் குத்தி தாக்கிவிட்டு தப்பிசென்றதாக சொல்லப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த மோகன்பாபு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திகிரி காவல்துறையினர் தலைமறைவாக உள்ள 6 பேரை தேடி வருகின்றனர்.