குடும்பத்தை விட்டு நீண்ட 28 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை : லாட்ரியில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா?

287

லாட்ரியில் அள்ளிய தொகை…

ஐக்கிய அமீரகத்தில் நீண்ட 28 ஆண்டுகளாக பணியாற்றும் இந்தியர் ஒருவர் லொட்டரியில் சுமார் 25 கோடி ரூபாய் வென்றுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அசைன் என்பவரே லொட்டரியில் கோடிகளை அள்ளியவர்.

நீண்ட 28 ஆண்டுகள் குடும்பத்தை விட்டு ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றிவரும் இவர், எஞ்சிய காலம் குடும்பத்துடன் வாழ முடிவெடுத்து, அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே, லொட்டரி சீட்டிலும் தமது அதிர்ஷ்டத்தை சோதித்து வந்துள்ளார். இதுவரை நாலைந்து முறை லொட்டரி வாங்கியுள்ள அசைனுக்கு ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையிலேயே புதனன்று அபுதாபி லொட்டரியில் அசைனுக்கு சுமார் 24 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

இந்த தொகை தமது கனவுகளை நிறைவேற்ற போதுமானது என கூறும் அசைனுக்கு மனைவியும் இரு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.