குனிந்து பார்க்க முடியவில்லையா? விரைவில் நினைத்து பார்க்க முடியாதளவு தொப்பை குறையும்!

547

அன்றாடம் உண்ணும் உணவில் ஒருசில உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் இன்றியமையாதது. அதிலும் அதிகப்படியான எடையால் அவஸ்தைப்படுவோர், அதனைக் குறைப்பதற்கு உதவும் உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து வர வேண்டும்.

அப்படி உடல் எடையை குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் தேன் மற்றும் பட்டை மிகவும் சிறப்பானவை.

பல வருடங்களாக உடல் எடையை குறைப்பதற்கு தேன் மற்றும் எலுமிச்சை மிகவும் சிறப்பான உணவுப் பொருட்களாக விளங்குகிறது.

அதுவும் தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து குடித்தால், எடையில் மாற்றம் தெரியும்.

மேலும் இந்த பொருட்கள் எடையை குறைக்க மட்டுமின்றி, பல்வேறு உடல் பிரச்சனைகளையும் தடுக்கும்.

உடல் எடை அதிகம் இருப்பவர்களின் உடலில் கொலஸ்ட்ராலானது அதிக அளவில் இருக்கும். இந்த கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பட்டை தூளை 2 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைந்திருப்பதைக் காணலாம்.

உணவு உண்ணும் முன்பு 2 டேபிள் ஸ்பூன் தேனில், சிறிது பட்டைத் தூள் சேர்த்து கலந்து சாப்பிட்டால், அது அசிடிட்டியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

மேலும் இந்த கலவை உணவுப் பொருட்களை எளிதில் உடைத்து செரிமானமடைய உதவி புரிவதால், உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதைத் தடுக்கலாம்.

விரைவில் எடையை குறைக்க வேண்டுமானால், தேன் மற்றும் பட்டைத் தூளை வெதுவெதுப்பான நீரில கலந்து காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் தூங்கும் முன்பும் குடிக்க வேண்டும்.

இதனால் இவை உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை விரைவில் கரைத்து, உடலை சிக்கென்று வைத்துக் கொள்ள உதவிபுரியும்.