குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபர் : மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!!

445

கடலூர்…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணும், அவரது மகளும் தனியாக வசித்து வந்தனர்.

இவரது மகள் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.

இந்நிலையில் அவரது தாய், மகளுக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதையடுத்து இன்று திடீரென அவரது மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மாணவி எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலிஸார் மீட்டுள்ளனர்.

அதில், “நான் குளிப்பதை வீடியோ எடுத்து என்னை மிரட்டுகிறார்கள். என்னை மன்னிச்சிடுமா எனக்கு வேறு வழி தெரியவில்லை” என எழுதப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மாணவியை வீடியோ எடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.