கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!

850

யாழ்ப்பாணத்தின் இளைஞன்..

கூகுள் நிறுவனத்தின் மிக முக்கிய பொறுப்பை ஏற்கப் போகும் யாழ்ப்பாணத்தின் இளைஞன்.!!கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது.இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார்.

வாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massachusetts Institute of Technology (MIT) இல் இடம் கிடைத்து 2018 இல் தனது MBA பட்டப்படிப்பை தொடங்கி தற்போது நிறைவு செய்துள்ளார்.கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவில் Seley Scholarship எனும் ஓர் உயர் பட்டத்தை பெற்று Student Speaker ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெகதீஸ் தனது வெற்றியின் மூல காரணம் தன் மனைவி வல்வெட்டித்துறையை சேர்ந்த மகள் யாழினி ஜெகதீஸ் என தனது MIT பேட்டியில் கூறியுள்ளார்.Google Headquarters இல் ஓர் நாள் பதவி ஏற்பேன் என சிறு வயதிலேயே கனவு கண்டு, அதை தனது இளம் வயதிலேயே சாதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.