கோவை…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவ சித்தின் மகள் கல்லூரி மாணவியான எனிமா ஜாக்குலின் கடையில் இருந்த கேரட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்த ஜாக்குலினை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில், எனிமா ஜாக்குனின் தந்தை நடத்திவரும் மளிகைக்கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் காய்களில் எலி மருந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த காய்கறியை சமைத்து சாப்பிட்டதால் கல்லூரி மாணவி உயிரிழந்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எலி மருந்துடன் இருந்த காய்களை தெரியாமல் சமைத்து சாப்பிட்டு உயிரைவிட்ட கல்லூரி மாணவியின் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.