கடலூர்………
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ப.லி.யான கணவனின் உடலை கட்டியணைத்து மனைவி கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தன் கண்முன்னே கணவன் துடிதுடித்து இறந்த நிலையில் உடலை தர மறுத்து மனைவி கலங்கிய சோகம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
திட்டக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவர் 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென வியாழக்கிழமை காலை உயிரிழந்தார். கணவனுக்கு உதவியாக கொரோனா வார்டில் இருந்த மனைவி கயல்விழி, அவரது இழைப்பை தாழாமல் கதறி அழுதது கண்கலங்க வைத்தது.
தன் கண் முன்னே கணவன் இறந்ததை ஏற்றுக் கொள்ளமுடியாத கயல்விழி, உடற்கூராய்வுக்கு உடலை தரமாட்டேன் எனக்கூறி கட்டிப்பிடித்து கதறியது சோகத்தில் ஆழ்த்தியது.
வேறு எந்த இணை நோயும் இல்லாத தனது கணவருக்கு தவறான சிகிச்சை அளித்துவிட்டதாகவும், அலட்சியம் காரணமாக தான் தன் கணவர் இறந்துவிட்டதாகவும் கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார்.
போலீசார் வந்து பேசியும் கயல்விழி ஒப்புக் கொள்ளாததால், 2 மணி நேரத்திற்கு மேலாக ராஜாவின் உடல் கொரோனா வார்டிலேயே இருந்தது.
இதனையடுத்து, ஒருவழியாக கயல்விழியை போலீசார், மருத்துவர்கள் சமாதானம் செய்ததை அடுத்து உடற்கூராய்வுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.