கொரோனா ஊரடங்கிலும் உலக சாதனை படைத்த கேரள மாணவி!!

274

ஆர்த்தி..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றானது மனித சமூகத்தின் அன்றாட வாழ்வியலில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இது சாதகமான விரும்பத்தக்க மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது என்றால் மிகையல்ல.

அந்த வகையில், நாட்டில் முதலில் கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்ட கேரள மாநிலத்தில் தற்போது பெண் ஒருவர் இந்த ஊரடங்கு காலத்தில், 350 ஆன்லைன் படிப்புகளை படித்து முடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

வேதியியல் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு முதுகலைப் பட்டம் பயின்று வரும் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்தி, கொரோனா ஊரடங்கு காலத்தினை மிகவும் பயனுள்ளதாக கழித்துள்ளார்.

இவ்வாறான இணைய வழி கற்றலுக்கு, தனது கல்லூரி தலைமை ஆசிரியரான அஜிம்ஸ் ஜி முகமது, ஆசிரியர் நீலீமா மற்றும் இணைய வழி படிப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஹனிவ்வா ஆகியோரின் தூண்டுதலே முக்கியக் காரணம் என ஆர்த்தி கூறியுள்ளார். பல்வேறு தளங்களில் பல படிப்புகளை முடித்த ஆர்த்தி தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக மாணவியின் பெற்றோர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.