கொரோனா வார்டிலேயே உருவான காதல் கதை.. இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படம்!!

549

கொரோனா……

கொரோனா காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்பெயினில் நாட்டில் கொரோனா வார்டில் வயதான இருவரிடையே உருவான காதல் வைரலாக பேசப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் முதலாக கொரோனா பாதிப்பால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஒட்டிய முதற்கட்ட பரவலின்போது சீனாவிற்கு பிறகு அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் இருந்து வந்தது. மேலும், தற்போது அங்கு வீரியமிக்க கொரோனாவின் பரவலும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்பெயினின் மேட்ரிட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 72 வயதான பெர்ணாண்டோ என்பவரும், 62 வயது ரொசரியோ என்பவரும் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்பின்னர், சிகிச்சையில் இருந்த இவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இதனிடையே, இருவரும் சமீபத்தில் மோதிரம் மாற்றி கொரோனா வார்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.