கொரோனா விதிகளை மீறி மண்டபத்தில் திருமணம்: அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி!!

442

நாமக்கல்………….

பரமத்தி வேலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்த தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருமண மண்டபங்களில் திருமணம் நடத்தவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் முகக்கவசம் அணியாமல், 50க்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருவாய் மற்றும் காவல்துறையில் ஆய்வு நடத்தி மண்டபத்திற்கு சீல் வைத்தனர். மேலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.