சருமத்தை சுத்தமாக்கும் எலுமிச்சை பேஸ் பேக்!!

1248

 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, தினமும் அலுவலகம் செல்லும் டென்ஷனில் சருமத்தை பாதுகாப்பது சற்று கடினமான காரியமாகவே இருக்கும்.

இனி அதை பற்றி கவலைப்பட வேண்டாம். எப்போதும் ப்ரஷ்ஷாக இருக்க பிரத்யேக குளியல் பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம். அது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை தோல் – 20 கிராம்,
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்,
கசகசா – 25 கிராம்,
பயத்தம் பருப்பு – 200 கிராம்
கடலை மாவு – 5 டீஸ்பூன்,
முல்தானி மட்டி – அரை டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 3 டீஸ்பூன்

செய்முறை

* முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மற்றும் கசகசாவை நன்றாக வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

* அரைத்த மாவில் கடலை மா, முல்தானி மட்டி கலந்து வைத்து கொள்ளவும்.

* தேவைப்படும் போது இந்த பவுடரில் சிறிதளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி 15 நிமிடங்கள் கழித்து குளியுங்கள்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த பேக்கை உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.