இந்தியா……….
இந்தியாவில் திருமணமான புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு மற்றும் ரூ 1 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது அவர்களை உச்ச மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள இர்கோட் கிராமத்தை சேர்ந்த முகமது சல்மான் – சதியா தம்பதிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. சல்மான் செக்யூரிட்டி பணி செ ய் து சாதாரண நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் மாநில அரசின் வீட்டுத் திட்டத்தின் கீழ் புதுமணத்தம்பதிக்கு இரண்டு படுக்கையறைகள் கொண்ட புதிய வீடு வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஷாதி முபாரக் திட்டத்தின் கீழ் மணப்பெண்ணுக்கு ரூ 1 லட்சம் தரப்பட்டுள்ளது.
இந்த இரண்டும் அவர்களை தேடி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் வந்துள்ளது. இதன்மூலம் தங்கள் மண வாழ்க்கையை தம்பதி மகிழ்ச்சியோடு தொடங்குகின்றனர்.
சல்மான் கூறுகையில், எனக்கு மாதம் ரூ 8000 சம்பளம் ஆகும், இதை வைத்து தேவையான பொருட்களை வாங்கி வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாது. தற்போது வீடு மற்றும் ரொக்கம் இருப்பதால் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ முடியும் என எதிர்பார்க்கிறோம்.
என் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டனர். எனக்கென்று எந்தவொரு சொத்துக்களும் இல்லை. நான் என் மாமா, அத்தை பராமரிப்பில் இருந்த நிலையில் அவர்களின் மகளை தான் மணந்துள்ளேன்.
எங்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது, அது நினைவாகி உள்ளது என கூறியுள்ளார்.