சாதி வெறியால் நடந்த கொடூர சம்பவம் : கதறி அழும் குடும்பத்தினர்!!

383

இந்தியா…

இந்தியாவில் காதல் பிரச்சனையால் இளைஞரின் உறவினர்களை கடத்தி சென்று சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜன். இவரது மகன் ரமேஷ்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த மோகனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினரை சார்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலை அவர்களது குடும்பத்தினர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனால் கடந்த 10ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

இதையடுத்து மோகனாவை காணவில்லை என்று அவரது உறவினர்கள் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரமேஷின் உறவினர்களான 3 பேரை பெண் வீட்டார் கடத்தி சென்று அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

சாதி ஆணவத்தில் மது குடிக்க வைத்தும், முகத்தில் சிறுநீர் கழித்தும், செருப்பால் அடித்தும் மிருகங்களைப் போல் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.