சாப்பிட்டதும் வயிறு குண்டாக தெரியுதா? இதை தேனில் குழைத்து சாப்பிடுங்க போதும்!!

851

நம்மில் பலபேர்களுக்கு சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் அவர்களின் வயிறானது குண்டாக இருக்கும். இதனால், பிடித்த உணவுகளை கூட பயந்துதான் உண்ண வேண்டும்.

அதற்கு அவர்கள் உடம்பின் சீரற்ற செரிமானம் பிரச்சினைகள் தான் முக்கிய காரணமாக உள்ளது.

நம்முடைய உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சீரற்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

எனவே செரிமான பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு ஒருசில இயற்கையான வைத்தியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

குறித்த பிரச்சினைக்கு சீரகம் ஒரு அருமையான மருந்தாகப் பயன்படுகிறது. சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து, உணவிற்குப் பின் அதில் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

சாப்பிட்ட பின் இளஞ்சூட்டில் சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

செரிமான பிரச்சினை மூலம் நமக்கு பசி எடுக்காமல் இருந்தால், அதற்கு சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு பொடி செய்து, அதை சர்க்கரை கலந்து, சாப்பிடுவதற்கு முன் 2 சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.

ஜீரணக் கோளாறுகள் மூலம் அல்சர் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு சீரகத்தை வாயில் போட்டு மென்று குளிர்ந்த தண்ணீரை குடித்து வரலாம். அல்லது சீரகப் பொடியை வெண்ணெயில் குழைத்தும் சாப்பிட்டு வரலாம். இதனால் தலைச்சுற்றல், மயக்கம், அல்சர் போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

சீரகத்தைக் கரும்புச்சாறு, எலுமிச்சைச்சாறு, இஞ்சிச்சாறு போன்றவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாற்றில் சீரகத்தைக் கலந்து குடித்து வந்தால், பித்த தலைவலி , செரிமான பிரச்சனைகள் குணமாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டால், சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டு வரலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளும் வராமல் தடுக்கப்படும்.