சாலையில் நடந்து கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : வெளியான சிசிடிவி-யால் பரபரப்பு!!

1128

கர்நாடக…

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நூர் பிஜா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவர், அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி, இந்த மாணவி பெங்களூரு நகரில் உள்ள ஒயிட் பீல்டு என்ற பகுதியில் கல்லூரி முடித்து தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் இவரை பின்தொடர்ந்த கிரேன் வாகனம் ஒன்று இவரது பின்னே சென்றுகொண்டிருந்தது. இருப்பினும் மாணவி சாலையின் ஓரமாகவே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த கிரேன் வாகனம் மாணவி மீது மோதியது.

இந்த கோர விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்டதும் அந்த ஓட்டுநர் தலைதெறிக்க ஓட, அந்த பகுதி மக்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவி இறப்புக்கு ஞாயம் கேட்டு, அவரது குடும்பத்தார், அப்பகுதி மக்கள் ஒயிட் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து நடந்த பகுதியில் உள்ள சாலையில் அங்குள்ள தனியார் கல்லூரி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனால் தொடர்ந்து அந்த இடத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்துள்ளதாகவும்.

அதோடு ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த வேகத்தடையும் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளததாகவும், இதுவே விபத்துகளுக்கு கூடுதல் காரணமாக உள்ளதாகவும், இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக விபத்தை ஏற்படுத்திய கிரேன் வாகனம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.